எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறை செல்வார்- புகழேந்தி

By Irumporai Jun 14, 2021 04:16 PM GMT
Report

பாமகவை விமர்சித்து பேட்டியளித்ததால் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  புகழேந்தி எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அரசியல் எதிரியை இனி சந்திக்கவுள்ளார்.

அவர் சிறைக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. மாபெரும் கட்சியை சிறிய கட்சியான பாமகவை சேர்ந்தவர் இப்படி பேசுவது சரியா? அதற்கு எதிராக பேசியதற்காக கட்சியிலிருந்து நீக்குவார்களா?.

.எடப்பாடி பழனிசாமி சிறையிலிருந்து பேசும் காலம் வரும். எடப்பாடி பழனிசாமி தற்போது ஆணவத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டிருக்கிறார் என பேசியுள்ளார்.