பதக்கங்கள் வரும் போகும்..நம் நாட்டின் வீரர், வீராங்கனைகளே தங்கம் தான் - எடப்பாடியார்!
நம் நாட்டின் வீரர், வீராங்கனைகளே தங்கங்கள் தான் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வினேஷ் போகத்
பிரான்சில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார் . இன்று இரவு தங்கப் பதக்கத்திற்கான இறுதி போட்டி விளையாட இருந்தது.
ஆனால் அவர் தற்பொழுது தகுதி நீக்கம் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பல்வேறு போராட்டங்களைக் கடந்து, இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடியார்
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் 50 கிலோ எடைப்பிரிவிற்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை திருமதி. வினேஷ் போகத் அவர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வான நிலையில்,
இன்று காலை அவரது உடல் எடை குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக உள்ளதாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது 140 கோடி இந்தியர்களின் தங்கக் கனவை தகர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.
பல்வேறு போராட்டங்களைக் கடந்து, இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாவண்ணம் வீரர்-வீராங்கனைகளுக்கான உடற்தகுதியை உரிய முறையில் கண்காணித்து,
உறுதிசெய்யுமாறு மத்திய அரசையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தையும் வலியுறுத்துகிறேன். பதக்கங்கள் வரும் போகும்; நம் நாட்டின் வீரர்-வீராங்கனைகள் என்றைக்கும் நமக்கு தங்கங்கள் தான்! என தெரிவித்துள்ளார்.