பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்க - எடப்பாடி பழனிசாமி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர நோயாளிகள் வருகை தரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று காலை, தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் ஒரு நோயாளி உயிரிழந்தது அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது இறப்பு குறித்து முழு விசாரணை நடத்தி உண்மை நிலையை விளக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
இனியாவது, விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வந்து செல்லும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் உடனடியாக ஆய்வு செய்து சீர்செய்ய வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.