எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் நாளை வேட்பு மனு தாக்கல்
tamilnadu
stalin
edappadi
nomination
By Updater Test
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கின. அதிமுக, திமுக தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இருவருமே நாளை தங்களுடைய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். முதல்வர் வேட்பு மனு தாக்கல் செயத்ததோடு அதிமுக தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..