தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்த மட்டும்தான் விஜய் பேசுறாரு - இபிஎஸ் தாக்கு
தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விஜய் பேச்சு
சென்னையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி என தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் பேசியுள்ளார்.
இது அவருடைய கருத்து. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தன் கட்சி வளர்வதற்காக தொண்டர்களை இதுபோன்று உற்சாகப்படுவார்கள்.
இபிஎஸ் சாடல்
அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என மக்கள் அங்கீகரித்துள்ளனர். திமுக ஆட்சி எப்போது தமிழகத்தில் அமைக்கப்பட்டதோ அதிலிருந்து சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை எல்லாம் தொடர்கதை ஆகிவிட்டன. இதையெல்லாம் சட்டமன்றத்தில் சொல்ல முற்பட்டபோதுதான் எங்களை வெளியேற்றி விட்டார்கள்.
செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.