திமுக ஆட்சியில் பல சார்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

M K Stalin Chennai Sexual harassment Edappadi K. Palaniswami
By Karthikraja Jan 13, 2025 01:17 PM GMT
Report

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பாலியல் தொல்லை

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் 50 வயது பெண் ஒருவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த ராணிப்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் நேற்று இரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அந்த பெண் கூச்சலிடவும் அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

edappadi palanisamy

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.

பல சார்கள் உருவாகிறார்கள்

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய திரு. மு.க.ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? #யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.