‛சூரியனை பார்த்து நாய் குரைத்தால், அது தான் சசிகலா : எடப்பாடி பழனிச்சாமி கருத்து
தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அப்போது சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி:
அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை பலமுறை சொல்லியாச்சு. சூரியனை பார்த்து... அது தான்(சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு என்கிற பழமொழி). அதிமுகவிற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என கறாராக கூறினார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மீண்டும் அதிமுகவிற்கு உரிமை கோறியுள்ளார் சசிகலா. ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் தொண்டர்கள்சந்திப்பு என இரு நாட்கள் பேசு பொருளாக மாறினார்.
இந்த நிலையில் மூன்றாவது நாளில், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். ஒன்றிணைவோம் என்கிற நோக்கில் அவர் எழுதிய கடிதம் இருந்தது. தற்போது சசிகலாவின் கருத்துக்களுக்கு பதில் கூறும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு எதிரான கருத்தை நேரடியாக தெரிவித்துள்ளார்.