'எடை' யில்லா 'பாடி' க்கு விடை கொடுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது... - தேனி மாவட்ட எம்.பி. ரவீந்திரநாத் பதிலடி

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jul 15, 2022 06:05 AM GMT
Report

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் மனு

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இது குறித்த வழக்கு நேற்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தலைமைக்கழகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை இன்று ஒத்திவைத்தது.

ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம்

இதனையடுத்து, நேற்று அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அணியினர் 18 பேர் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேர் அதிரடியாக நீக்கம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

admk

ஓ.பன்னீர்செல்வம் மகன் பதிலடி

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மாவட்ட எம்.பி.யுமான ரவீந்திரநாத் பதில் அளித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்.. 'எடை' யில்லா 'பாடி' க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்" என்று பதிவிட்டுள்ளார்.