புதிய கட்சிகள் இணைய வாய்ப்பில்லை: அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து முடிவாகாமல் இருந்தது.

நேற்று அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து விட்டு வந்தார், அதன் பின் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
இனிமேல் புதிய கட்சிகள் இணையவாய்ப்பில்லை, கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன, நான்கு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
யாருக்கு எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமோ அதைப்பொறுத்து ஒதுக்கீடு செய்யப்படும், தவெகவுடன் இதுவரையிலும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணி கட்சிகளில் எந்தெந்த கட்சியை தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
