தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 13 பேர் உயிரிழப்பிற்கு ஈபிஎஸ் தான் காரணம் - சட்டசபையில் ஜவாஹிருல்லா உரை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழப்பிற்கு காரணம் ஈபிஎஸ் தான் என்று இன்று சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசவை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். அருகே அமர்ந்தனர். இதனையடுத்து, நேற்றைய சட்டசபை கூட்டத்தில் ஈ.பி.எஸ். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி கைது
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், இதையும் மீறி அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும்போது போலீசாருக்கு, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் பேருந்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
13 பேர் உயிரிழப்பிற்கு ஈபிஎஸ் தான் காரணம்
இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழப்பிற்கு ஈபிஎஸ்தான் காரணம்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஈபிஎஸ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கை, வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றார்.