கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க சதி?- அதிமுக ட்விட்டரில் வீடியோ வெளியீடு!
கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க திட்டமிடுவதாக காணொலி ஒன்று அதிமுக அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
கோடநாடு வழக்கு -
— AIADMK (@AIADMKOfficial) August 22, 2021
“டெல்லி பத்திரிக்கையாளர்” என இந்த காணொலியில் அடையாளம் காட்டபடுகிற மேத்யூஸ் சாமுவேலின் பிரதிநிதியான பிரதீப் என்பவர் தொடர் குற்றவாளிகள் சயன் & மனோஜ் ஆகியோரிடம் மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர்கள் @OfficeOfOPS & @EPSTamilNadu இருவரையும் கோடநாடு வழக்கு - சயன்-மனோஜ் 1/2 pic.twitter.com/QOijQ82onm
அந்த வீடியோ பதிவில் பிரதீப் என்பவர், சயன் மற்றும் மனோஜிடம் கோடநாடு வழக்கில், ஈபிஎஸ், ஓபிஎஸை சேர்ப்பது குறித்து பேசுவது அந்த வீடியோவில் உள்ளது.
குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் சிக்க வைப்பது குறித்து அவர்கள் பேசுகின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே கோடநாடு வழக்கிலிருந்து சயன், மனோஜ் தப்ப முடியும் என அவர்கள் பேசுவது வீடியோவிலுள்ளது
. இந்த வீடியோவிலுள்ள பிரதீப் என்பவர் டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலின் பிரதிநிதி என அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கூறுகையில் தனக்கும் அந்த வீடியோவிற்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.