திமுக-வை கடுமையாக விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி

Edappadi K. Palaniswami
By Fathima Feb 15, 2026 02:35 PM GMT
Report

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசுகையில், கடுமையாக உழைத்து படிப்படியாக முன்னேறியுள்ளேன், அப்பா வழியில் முதல்வரானவர் முக ஸ்டாலின், கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது கூட பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் ஊழல் நடக்கிறது, டெண்டர் மூலம் திமுக அரசு ஊழல் செய்கிறது. அதிகாரிகளே உடந்தையாக செயல்படுகின்றனர்.

அதிமுக வலிமையாக கூட்டணி, ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது,  காங்கிரஸ், திமுக இடையே தேர்தல் போர் நடக்கிறது. இந்த முறை கூட்டணி வைப்பதில் சந்தேகம் என தெரிவித்தார்.