நாங்கள் செய்தது போல பண்ணுங்க..கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம்..அட்வைஸ் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி
கொரோனா தொற்று அதிகரித்ததற்கு அதிமுகவே காரணம் என திமுக குற்றஞ்சாட்டிய நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "பரிசோதனை மையங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என கூறினார்.
மேலும் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாகவும் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையினை போக்க மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என கூறினார்.
மேலும்,அதிமுக அரசு சிறப்பாக கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டது. போல திமுக அரசு போர் கால அடிப்படையில் செயல்பட்டால். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறினார்.