மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது

edappadipalanisamy maniarrested
By Irumporai Nov 28, 2021 04:33 AM GMT
Report

வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. 45 வயதான இவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.

மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது | Edappadi Palanisamy Former Aide Mani Arrested

இவர் அரசு பணி வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் .அதற்கான ஆவணங்களையும் அவர் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணியிடம் போலீசார்  தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.