உடம்பில் தமிழ் உணர்ச்சி இருந்திருந்தால் இப்படி செய்திருப்பீர்களா? - எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பழனிச்சாமிக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசவை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது.
இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது.
ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். அருகே அமர்ந்தனர். இதனையடுத்து, நேற்றைய சட்டசபை கூட்டத்தில் ஈ.பி.எஸ். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
ஈபிஎஸ் அணியினர் வெளிநடப்பு
இன்று சட்டசபை காலை 10 மணிக்கு கூடிய நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர். சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் க்கு அருகருகே இருக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்க்கு பதிலாக உதயக்குமாரை நியமிக்க வேண்டும் என பேரவை தலைவருடன் விவாதத்தில் ஈடுபட்டு அமளி செய்தனர்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டினார்.
அப்போது கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.எக்களை, சபாநாயகர் தன் இருக்கையிலிருந்து எழுந்து, செல்வதை கேக்குறீங்களா என்று கூற, அதிமுகவின் ஈபிஎஸ் அணியினர் வெளிநடப்பு செய்து, சட்டப்பேரவை வாசலில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.
அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்
அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் இந்நிலையில், சட்டப்பேரவையில் விரும்பத்தாகாத நிகழ்வுகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நிறைவேற்றி வருகின்றனர். பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார்.
மேலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வேளையில், உடம்பில் தமிழ் உணர்ச்சி இருக்குமேயானால், தன்மான ரத்தம் ஓடுமேயானால் அவர்கள் அவையில் இருந்திருக்க வேண்டும் என்று தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.