ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி

Edappadi K. Palaniswami Tamil Nadu Election 2026
By Karthikraja May 09, 2026 08:27 AM GMT
Report

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது. 

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy Congrats To Tamilnadu New Govt

தற்போது 116 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ள நிலையில், 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக இன்று மாலை 4 மணிக்கு தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

அதேவேளையில், தமிழக அரசியலின் எதிர் எதிர் துருவங்களான திமுக - அதிமுக கூட்டணியமைத்து ஆட்சியை பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதிமுகவின் எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். 

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy Congrats To Tamilnadu New Govt

இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆட்சியமைக்க உள்ள கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy Congrats To Tamilnadu New Govt

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். 

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.