ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு பண்றாங்க; சீறிய எடப்பாடி - ஆனால், அப்போ கமல்..

Kamal Haasan ADMK DMK Edappadi K. Palaniswami Tamil
By Sumathi Aug 19, 2025 10:03 AM GMT
Report

அதிமுக கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் விவகாரம் 

வேலூர், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை.

kamalhassan - edappadi palanisamy

நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது.

தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன்.

எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை.

அடுத்த கூட்டத்தில் இது போன்று வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரை நாங்கள் நோயாளி ஆக்கி அதே ஆம்புலன்சில் அனுப்பிவிடுவோம் என எனத் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது - திருமாவளவன்

கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது - திருமாவளவன்

எடப்பாடி - கமல்

இந்நிலையில் கடந்த 2021 மார்ச், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் நடந்த மகளிர் தின சிறப்பு கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது "வழக்கமாக கூட்டம் அதிகமானால் ஆம்புலன்ஸ் வரும்.

உள்ளே ஆள் இருந்தாலும் அனுப்பிடுங்க, இல்லாமல் போனாலும் வேகமாக அனுப்பிடுங்க. என்னைப் பேசக்கூடாது என அதிக சத்தத்துடன் வருகிறது. நன்றாக கூட்டம் கூடினால் காலி ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டே போகும்.

பல ஊர்களில் ஆம்புலன்ஸ் வருகைக்காக வழி விட கூட்டமே களைந்து விடுகிறது" என பேசியிருப்பார். மற்றொரு பரப்புரை கூட்டத்தில், "வழி இல்லாத ரோட்டில் ஆம்புலன்ஸ் கத்துகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டம்னா அனுப்பி விடு ஆம்புலன்சை.

அவர்கள் ஆம்புலன்ஸ் அனுப்ப அனுப்ப எங்களின் ஆரோக்கியம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை" என தெரிவித்திருந்தார். கமல்ஹாசன் தங்களின் அனைத்து சாலையோர கூட்டங்களின் போதும் ஆம்புலன்ஸை அனுப்பி விடுவதாக அதிமுக தரப்பு மீது குற்றச்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.