செய்தியாளர்களிடம் ஆக்ரோஷமாக எகிறிய ஈ.பி.எஸ். - கத்தி கூச்சலிட்ட தொண்டர்கள்...!
இன்று நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை பார்த்து ஆக்ரோஷமாக எகிறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். அருகருகே அமர்ந்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தில் ஈ.பி.எஸ். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
ஈபிஎஸ் அணியினர் வெளிநடப்பு
இதனையடுத்து, நேற்று சட்டசபை காலை 10 மணிக்கு கூடிய நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர். சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் க்கு அருகருகே இருக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்க்கு பதிலாக உதயக்குமாரை நியமிக்க வேண்டும் என பேரவை தலைவருடன் விவாதத்தில் ஈடுபட்டு அமளி செய்து வெளிநடப்பு செய்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி கைது
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இந்தத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், இதையும் மீறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும்போது போலீசாருக்கு, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் பேருந்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
செய்தியாளர்களிடம் எகிறிய எடப்பாடி பழனிச்சாமி
இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்துக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, பேசிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, திடீரென செய்தியாளர்களை பார்த்து ஏ.. ஏன்ய்யா.. என்று எழுந்து நின்று எகிறினார். இதைப் பார்த்ததும் பின்னால் இருந்த அதிமுக தொண்டர்கள் எழுந்து நின்று செய்தியாளர்களிடம் கூச்சல் போட்டு மிரட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Teacher : ellarum ezhuthiyacha board uh alichiralama
— black cat (tribal) (@Cat__offi) October 19, 2022
Backbenchers : pic.twitter.com/uGkGOuVRKu