தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - ஈ.பி.எஸ் விமர்சனம்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Feb 20, 2024 10:02 AM GMT
Report

வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - ஈ.பி.எஸ் விமர்சனம்! | Edappadi Palanisamy About Tn Agriculture Budget

இது திமுக அரசு தாக்கல் செய்யும் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியார்களை சந்தித்தார்.

அப்போது தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய அவர், "வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.

தமிழ்நாடு பட்ஜெட்: விமர்சித்த எடப்பாடி பழனிசாமி - பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு பட்ஜெட்: விமர்சித்த எடப்பாடி பழனிசாமி - பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

விமர்சனம் 

தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. நெல், கரும்பு குறித்த தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - ஈ.பி.எஸ் விமர்சனம்! | Edappadi Palanisamy About Tn Agriculture Budget

குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் நெல் கொள்முதல் முறையை ரத்து செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது.

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை" என்று தெரிவித்துள்ளார்.