தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை; அதிமுக தனித்து ஆட்சி - இபிஎஸ் விளக்கம்
அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் கூட்டணி?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது சிதம்பரம் சென்றுள்ள அவர் அதிமுக தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
இபிஎஸ் விளக்கம்
இந்நிலையில் பேட்டியளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் கூட்டணி ஆட்சி அமைக்குமா என்கிற கேள்விக்கு, “யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது.
அதிமுக அரிதி பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். பாஜக - தவெக இதில் எது வலுவான கூட்டணி என்கிற கேள்விக்கு, “பாஜக ஒரு தேசிய கட்சி. அது பல மாநிலங்களை ஆளும் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சொந்த பலம் உள்ளது.
ஆகையால் பாஜகவையும் தவெகவையும் ஒப்பிட முடியாது. மக்கள் விரோத திமுகவை எதிர்கொள்ள அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.