செமஸ்டர் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது? - இதுதான் திமுகவின் சமூகநீதியா? - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
சர்ச்சை கேள்வி
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 4 சாதி பிரிவுகளை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். செமஸ்டர் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்வியால் தற்போது சலசலப்பும், சர்ச்சையும் எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
செமஸ்டர் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மக்களே பாரீர், 'பெரியாரின்' பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா? என்று பதிவிட்டுள்ளார்.
மக்களே பாரீர், 'பெரியாரின்' பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில்,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 15, 2022
பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும்,
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா? pic.twitter.com/3G8eBsHk1q