ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. அரசு மூக்கை நுழைக்கிறது... - எடப்பாடி பழனிசாமி
இன்று மயிலாடுதுறையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.
தருமபுரம் ஆதீனத்துடன் சந்திப்பு
இதனையடுத்து, அவர் மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்துக்கு சென்று 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, அவருக்கு நினைவு பரிசு வழங்கினார்.
பேட்டி
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது -
எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். மதத்திற்குள் யாரும் நுழையக்கூடாது. ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. அரசு மூக்கை நுழைக்க பார்க்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்த பிறகே தடையை இந்த அரசு விலக்கியது. தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். ஆனால் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.