நீட் தேர்வு குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமி தயாரா? - முதலமைச்சர் ஸ்டாலின் சவால்

neet cmstalin edappadipalanichamy
By Irumporai Feb 11, 2022 08:06 AM GMT
Report

நீட் தேர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி விவாதிக்க தயாரா?  என ஈரோடு பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலி சவால் விடுத்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோட்டில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சி ஆகிய இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற காணொலி பிரச்சாரத்தை ஈரோடு மாவட்டத்தில் 108 இடங்களில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் செய்து தருகிற கட்சி திமுக என்றும், தேர்தலுக்கான உருவான கட்சியல்ல திமுக என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வு குறித்து  பேச எடப்பாடி பழனிச்சாமி  தயாரா? -  முதலமைச்சர் ஸ்டாலின் சவால் | Edappadi Palanichamy Ready Neet Cmstalin

மேலும், எடப்பாடி பழனிசாமி பச்சை பொய் பழனிசாமி என்று சாடிய ஸ்டாலின், பொய் சொல்வதில் அவர் டாக்டர் பட்டம் பெறுவார் என்றும் கூறினார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து எடப்பாடி பொய் பேசி வருவதாக பேசிய முதலமைச்சர்.

ஜெயலலிதா நீட் தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, ஓராண்டு விலக்கு பெற்று கொடுத்தார். இதை தான் மறுக்கவில்லை என்றும் அவர் கூறினார். பா.ஜ.க-விடம் அதிமுக பதுக்கியது தான் நீட் தேர்வு, 4 ஆண்டுகளாக நடைபெற்றது என்ற ஸ்டாலின், இது தொடர்பாக என்னிடம் விவாதிக்க தயாரா? என சவால் விடுத்தார்.