முதல்வர் பழனிசாமி செய்த அந்த செயலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்: கனிமொழி

election admk dmk time
By Jon Feb 11, 2021 12:39 PM GMT
Report

மதுரையில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின்’ என்ற தலைப்பில் இரண்டாவது நாளாகப் பிரச்சாரம் செய்துவருகிறார் கனிமொழி. அப்போது பேசிய அவர், “செல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிப்படை வசதியே செய்து கொடுக்கப்படவில்லை. நீர்நிலைகளைத் தூர்வார அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் நீர்நிலைகளைத் தூர்வாரவில்லை.

பேப்பர் அளவிலேயே தூர்வாரும் பணிகள் உள்ளன. அதிமுக ஆட்சி காலத்தில் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில்தான் மதுரை வளர்ச்சிக்காக ஆயிரத்து 500 கோடி அளவிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. மறைந்த கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீட்டில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். அதிமுகவிற்கு இந்த தேர்தல் ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என அமைச்சர்கள் கூறிவருகிறார்கள். அது அவர்களின் கனவாக மட்டுமே இருக்கும். மக்களின் மனநிலை ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது”