கலக்ஷன் ,கமிஷன் ,கரப்ஷன் .... இதுதான் திமுகவின் தாராக மந்திரம் : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
ஒவ்வொரு துறையிலும் ஊழல் கலெக்ஷ்ன் ,கமிஷன் ,கரப்ஷன் இதுதான் திமுகவின் தாராக மந்திரம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழ்னிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார் .
கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும் என்றும் அன்பு சகோதர் எடப்பாடி பழனிசாமி நானும் இணைந்து சிறப்பாக அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினோம் ஆகவே மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்படி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
கலெக்ஷன் கமிஷன்
இந்த நிலையில் சென்னையில் பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்படி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து திமுக ஆட்சி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி :
திமுகவின் குறைகள் குறித்து தினமும் பல்வேறு அறிக்கைகள் வெளியிடுகின்றேன் ஆனால் நீங்கள் வெளியிடுவதில்லை என லேசாக கோபப்பட்ட ஈபிஎஸ் .

திமுக ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நான்கு மாதம் ஆகின்றது. ஆனால் இது வரை மக்களுக்கு உகந்த எந்த திட்டத்தை கொண்டுவதுள்ளது?
ஒவ்வொரு துறையிலும் ஊழல் கலெக்ஷன் ,கமிஷன் ,கரப்ஷன் இதுதான் திமுகவின் தாராக மந்திரம் இதை தவிர வேறு எதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது
தொடர்ந்து பேசிய ஈபிஎஸ் நான் ஆட்சியில் இருந்த போது 11 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினேன் இது இந்தியாவில் எந்தமாநிலத்திலும் கொண்டு வரவில்லை , ஆறு சட்டக்கலூரி , மூன்று கால்நடை மருத்துவமனைகள் , ஆறு புதிய மாவட்டங்களை உருவாகியுள்ளோம் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக் உருவாக்கினோம் .

ஆனால் அந்த மினி கிளினிக்குகளை தற்போது திமுக அரசு மூடியுள்ளது. இன்று மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது விவசாயிகள் உற்பத்திசெய்யும் நெல்லினை முறையாக உற்பத்தி செய்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொடுக்க முடியவில்லை.
குறிப்பாக சட்ட ஒழுங்கு திமுக ஆட்சியில் மிக மோசமாக உள்ளது தமிழகத்தின் பல பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது இதனால் இளைஞர் சீரழியும் நிலை அதிகமாகியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நாங்கள் தடை கொண்டு வந்தோம் , இங்கு ஆட்சிமாற்றத்தால் முறையான தரவுகளை நீதி மன்றத்தில் சமர்பிக்காத காரணத்தால் மீண்டும் ஆன்லைன் சூதட்டாம் தொடர்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு கருத்து கேட்க வேண்டுமா
இது எல்லாவற்றையும் விட யாராவது ஆன்லைன் சூதாட்டத்திற்கு கருத்து கேட்பார்களா? சரியான சிந்தனை இல்லாத முதலமைச்சராக இருக்கும் போது தமிழக மக்களுக்கு எப்படி நன்னமை கிடைக்கும் என கேள்விஎழுப்பினார்.
இந்த நிலையில் போதைப்பொருள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.