அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் - நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கும் தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. கடைசியாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிகாரம் இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நன்றி தெரிவித்த இபிஎஸ்
தன்னை இடைக்கால அதிமுக தலைமை பொதுச்செயலாளர் தேர்ந்தெடுத்தற்காக எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்திட கடுமையாக உழைப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.