பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதனையடுத்து, 100ற்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 64 காவலர்கள் குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் எதிர்பாராமல் சிலர் சிக்கி உயிரிழந்த சோகங்களும் அரங்கேறி இருக்கிறது.

விபத்து மற்றும் நீர்நிலைகளில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துடன், தலா ரூ. 1 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டிருக்கிறார். இது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.