கள்ள உறவில் பிறந்தவர் தான் எடப்பாடி- ஆ.ராசா எம்.பி சர்ச்சைக் கருத்து

stalin edappadi Panneerselvam rasa
By Jon Mar 26, 2021 12:38 PM GMT
Report

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவும், அதிமுகவும் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டாலினின் செருப்பிற்குண்டான தகுதி கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என்று கடுமையான வார்த்தைகளை திமுக விமர்சனமாக முன்னிறுத்தினார்கள்.

அதற்கு கூலாக பதிலளித்த எடிப்பாடி பழனிச்சாமி, ‘ஸ்டாலின் செருப்பை விட நான் குறைந்தவனாகவே இருக்கிறேனாம். அப்படியே இருந்துட்டு போறேன். நான் விவசாயி அப்படி தான் இருப்பேன். கடவுள் எனக்கு எதையும் தாங்கும் இதயத்தை கொடுத்துள்ளார்’ என்று அழகாக சொன்னது மக்களை பெரிதும் கவர்ந்தது.

தற்போது திமுகவின் எம்.பி ஆ.ராசா, எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவறாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அநாகரீகமான பேச்சு திமுக மீது பொதுமக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

அந்த வீடியோவில் ஆ.ராசா பேசியது, “ ஓராண்டு காலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையில் கொடுத்த விளம்பரத்தால் பத்திரிக்கைகள் அவரை புகழ்ந்து பேசுகின்றனர். நல்ல உறவில் சுகப்பிரசவமாக பிறந்தவர் ஸ்டாலின். கள்ள உறவில் குறைப்பிரசவமாக பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று பேசியியிருக்கிறார். தற்போது இந்த பேச்சு பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.