எடப்பாடியில் முதல்வர், போடியில் துணைமுதல்வர் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்
வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் முதல்வர் பழனிசாமி. அதேபோல் துணை முதல்வர் பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தின் முக்கிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தை மாவட்ட வாரியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுமுதல் அதிமுகவின் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அதேபோல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
எடப்பாடியில் போட்டியிட முதல்வரும், போடியில் போட்டியிட துணை முதல்வரும் அதிமுகவில் விருப்ப மனு அளித்துள்ளனர்.