கொரோனா தளர்வுகள் – 29ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை!
tamilnadu
cm
eps
By Jon
தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதத்திற்கான கொரோனா தளர்வுகள் பற்றி வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களோடு முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை தற்போது முன்பை விட கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உருமாறிய கொரோனா பரவ தொடங்கி இருப்பதால் மக்கள் கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா தாக்கம் பற்றி மருத்துவர்களின் கருத்துக்களை கேட்டறிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.