சட்டமன்ற தேர்தலில் கெத்து காட்டிய எடப்பாடி தொகுதி

election constituency edappadi aiadmk
By Jon Apr 08, 2021 03:04 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களது தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தேர்தலில் மாஸ் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சட்டமன்ற தேத்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணியளவில் நிறைவு பெற்றது.

இந்த சட்டமன்ற தேர்தலில் சாமானிய மக்கள் முதல் அரசியல் மற்றும் திரைபிரபலங்கள் உளப்பட பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். நடந்து முடிந்த இந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 72.78% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற மே 2ம் தேதி எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி பார்த்தல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீதம், சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீதம், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கில் 60.72 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதன்படி, முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளை பொறுத்தவரை பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவும், ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.