பிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. தூக்கி வைத்து சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி – இணையத்தை கலக்கும் வீடியோ
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் அதிமுக ஆட்சி காலத்தில் சாதனை திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
மக்களுடன் மக்களாக கலந்து ஓட்டு சேகரித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது அங்கிருந்த குழந்தை ஒன்று உள்ளது.
இதனை பார்த்த முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு குழந்தையை தூக்கி சமாதானப்படுத்தி அதன் பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைத்துள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான தருண வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்து வருகிறது.