ரோட்'ல போறவங்க'ல குழு அமைச்சா அதுக்கு பதில் சொல்லணுமா? எடப்பாடியார் நக்கல்!
எடப்பாடி பேட்டி
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது வருமாறு, 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட 1% அதிகமாக பெற்றுள்ளோம்.
திமுகவின் வாக்கு சதவீதம் தான் 6% குறைந்துள்ளது. 2014-இல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக பெற்ற சதவீதம் 18.80%, தற்போது 18.28% பெற்றுள்ளது. அவர்களும் சரிவை அடைந்துள்ளார்கள்.
ஆனால், திட்டமிட்டு அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிவடைந்து விட்டதாக ஒரு தோற்றத்தை வெளிப்படுத்திகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. 2019-ஆம் விட 1% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம். அமைச்சர்கள், ஸ்டாலின், உதயநிதி என ஆட்சி அதிகாரம் வைத்து முழு பலத்தை வைத்து தேர்தலை சந்தித்தார்கள். கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.
ரோடு'ல போற
பாஜக கூட்டணிக்கு பிரதமர், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என பல மத்திய அமைச்சர்கள் வந்து பிரச்சாரம் செய்தார்கள். ரோடு ஷோ'லா நடத்தினார்கள். ஆனால், அதிமுகவில் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். சில தலைவர்கள் ஒரு சில தொகுதிகளில் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த சந்தர்ப்பில் தான் 1% கூடுதலாக அதிமுக பெற்றுள்ளது.
2014-இல் திமுகவை கோவையில் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது மக்களவை தேர்தல், ஆகையால் அதிமுகவிற்கு சரிவு இல்லை. இரண்டு தேர்தலுக்கும் மக்கள் வேறு மாதிரி தான் வாக்களிப்பார்கள். ஆகையால் 2026'இல் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். எங்களை போல தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கவிலை என்றால், திமுக எங்களை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார்கள்.
நாங்கள் தமிழகத்தின் நலனை காக்க யாருடனும் கூட்டணி வைக்காமல் இருக்கிறோம். தற்போதும் கட்சி பலமாக தான் இருக்கிறது.புகழேந்தி அமைத்திருக்கும் புதிய குழு குறித்து பேசியவர், ரோடு'ல போற வருவாங்க'ல ஒரு குழு அமைச்சா, அதைப்பத்தியெல்லாம் பதில் சொலல் முடியுமா. அவுங்க காட்சியிலேயே இல்லை.