தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்
அதிமுக- பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க செல்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதற்காக இன்று காலை 10 மணியளவில் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்தும் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக உட்பட கட்சிகள் உள்ளன, பாஜக எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இதுவரையிலும் அறிவிப்பு வெளியாகாத நிலையில் இன்று டெல்லிக்கு செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
