அதிகரிக்கும் காவல் மரணங்கள் - படங்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் - இபிஎஸ்

M K Stalin ADMK DMK Edappadi K. Palaniswami Thiruvallur
By Karthick Apr 21, 2024 11:54 AM GMT
Report

திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை கைது ஒருவர் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இது குறித்து கண்டனங்களை தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதவில்,

edapadi-palanisamy-slams-mk-stalin-in-lockup-death

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இத கூட மாத்திட்டாங்க - அனைத்திற்கும் காவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இத கூட மாத்திட்டாங்க - அனைத்திற்கும் காவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம்.

பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.