சட்டத்தை நிலைநிறுத்த தெரியாத கையாலாகாத அரசு - எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

Tamil nadu Government of Tamil Nadu ADMK Edappadi K. Palaniswami
By Karthick May 30, 2024 11:11 AM GMT
Report

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்களா? சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தத் தெரியாத கையாலாகாத விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம்!

எடப்பாடி கண்டனம்

இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,  

குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக சீரழிக்கிறது திமுக அரசு - எடப்பாடி கண்டனம்

குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக சீரழிக்கிறது திமுக அரசு - எடப்பாடி கண்டனம்

விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா ? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறனர். கடந்த 36 மாத விடியா திமுக ஆட்சியில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஒங்கி இருக்கின்றன என்பது பல்வேறு கொடும் சம்பவங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

edapadi palanisamy condemns government of tn

காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் காவல் துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். தற்போதுள்ள ஆட்சியாளர்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற இருமாப்போடும், துணிச்சலோடும் சமூக விரோத சக்திகள் ஆட்டம் போடுகின்றன. மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது.

edapadi palanisamy condemns government of tn

விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், தமிழ் நாடு காவல் துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.