திமுக ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தால் தானே குறை கூற முடியும் - கலாய்த்த எடப்பாடி பழனிசாமி!
மு.க.ஸ்டாலின் கிடைக்கும் நேரத்தில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
ராணிப்பேட்டை மாவட்டம் பாண்டியநல்லூரில், அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர்.
அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது. மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது.
கடன் தள்ளுபடி
திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும். மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.
இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா? என்கிறார் முதல்வர். விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.