முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உடல்நிலையை நேரில் சந்தித்து விசாரித்தார் ஓபிஎஸ்

health cm ops edapdi
By Praveen Apr 22, 2021 09:16 PM GMT
Report

குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உடல்நிலையை நேரில் சந்தித்து விசாரித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த திங்கட்கிழமை சென்னை, சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க நோய்க்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நடந்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்வரின் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிட நேரம் நடந்தது.