பூட்டிய வீட்டில் நோட்டீஸ்..அசோக் குமாரின் மனைவி நேரில் ஆஜராக உத்தரவு
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கரூர் வீடு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டிவரும் ஆடம்பர பங்களாவின் கட்டுமானத்திற்காக வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த கிரானைட் கற்கள் போன்றவை வரவழைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.
அதன் அடிப்படையில், கடந்த மே மாதமே அணு வருமான வரி துறையினர் ரைட் மேற்கொண்டனர்.
சகோதரர் மனைவி நோட்டீஸ்
இந்த நிலையில் கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியில் ஆடிட்டர் ரவிஷ்குமார் என்பவரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னர் ராமகிருஷ்ணபுரத்தில் பூட்டப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர்.
அமலாக்கத்துறை துணை இயக்குநர் பிரிகேஷ் ஸ்ரீனிவாஸ் கையெழுத்து இட்ட நோட்டீஸில் கரூர்-சேலம் புறவழிச்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பங்களா குறித்த ஆவணங்களுடன் அசோக் குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.