செந்தில் பாலாஜிக்கு மீண்டும் குறி? டாஸ்மாக் அலுவலகத்தில் 2வது நாளாக ரெய்டு!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் இன்று 2ஆவது நாளாக சோதனை நடத்துகின்றனர்.
டாஸ்மாக்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 15 மாதங்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2024ல் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் சக்தி மெஸ் சக்திவேல்,
ED சோதனை
பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் எம்சிஎஸ் சங்கரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 20 பேர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் ரெய்டு நடந்தது. மேலும், செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கும்
சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இது 2வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.