சோதனையில் கைப்பற்றப்பட்டவை - அதிகாரபூர்வமாக தகவல் அளித்த ED
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிரடி

சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
அதிகாரபூர்வ தகவல்

கடந்த மாதம் 3ம் தேதி, செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 22 லட்ச ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத 16.6 லட்ச ரூபாய் பொருட்கள், நிலங்கள் தொடர்பான சந்தேகத்திற்குரிய 60 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan