தமிழகத்திற்கு இந்த பகுதிக்கு ரெட் அலர்ட் : சென்னையில் அதிக கனமழைக்கு வாய்ப்பு
Tamil nadu
By Irumporai
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மழை அதிகரித்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு பருவமழை காரணமாக வடகிழக்கு இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இதனால் தமிழகத்தில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,திருவாரூர் உள்ளிட்ட 4 - வட கடலோர மாவட்டங்கள் , புதுச்சேரி காரைக்கால் பகுதியில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே வட தமிழக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதலே கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.