செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள்...மீண்டும் ED திடீர் ரைடு..?
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி - ED விவகாரம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2015-ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக கூறி, அவரை கைது செய்து அமலாக்கத்துறை நீதிமன்ற காவலில் வைத்துள்ளது. விசாரணை முடிந்த பின்பு, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ளார்.
இதில், அமலாக்கத்துறை வரும் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்ட நிலையில், இன்று காலை முதல் திடீரென அமலாக்கத்துறை ரைடில் ஈடுபட்டு வருகின்றது
திடீர் ரெடி ஏன்..?
சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10-இற்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.
முகப்பேரில் பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் வீட்டிலும், சென்னை அண்ணாநகரில் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனை ஏன்? கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன போன்றவரை குறித்தான கேள்விகளுக்கு அமலாக்கத்துறை தனது சோதனையை முடிந்த பின்பே பதில் கிடைக்கும்.