பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை - பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த 3 பேர் மரணம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால் பவுடர், மருந்துகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் நீண்ட வரிசை நிற்கும் அவலம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இலங்கைப் பொருளாதாரம் கடுமையாக வீழ்த்தி அடைந்தது. இந்தப் போரை அடுத்து, மெல்ல, மெல்ல பொருளாதாரம் சற்று உயரத் தொடங்கியது.
இதனையடுத்து கடந்து 2019ம் ஆண்டு குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால், இலங்கையின் பொருளாதாரம் சற்று வீழ்ச்சி அடைந்தது. இதன் பின்பு கொரோனா தாக்கம், தற்போது உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால், பெட்ரோல்-டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நேற்று கண்டி, பெட்ரோல் நிரப்புவதற்காக சுமார் 6 மணி நேரம் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த 70 வயது முதியவா் உட்பட 2 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
