இருட்டில் அமைச்சரவை கூட்டம்.. இலங்கையாக மாறும் பாகிஸ்தான்.. பீதியில் பொதுமக்கள்
நமது அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது, இந்த நிலையில் தற்போது அங்கு பிறபிக்கப்பட்டுள்ள சட்டங்கள் மூலமாக இலங்கை போன்று அவசர நிலை ஏற்பட வாய்ப்புள்ளதக கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
நெருக்கடியில் பாகிஸ்தான்
கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மோசமான நிலையினை சந்த்கித்த இலங்கை தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் கடும் நெருக்க்டி நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பொருளாதார நிலை மிக மோசமாக உள்ள நிலையில் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.
தற்போது நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு ஒரு மாத இறக்குமதி மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகின்றது , இந்த இக்கட்டான நிலையில்தான் பாகிஸ்தான் அரசு புதிய உத்தரவினை பிறபித்துள்ளது.

இரவில் மூடப்படும் கடைகள்
முதற்கட்டமாக நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டினை குறைக்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து மால், மாக்கெட், கடைகளும் இரவு 8.30 மணிக்குள் மூடிவிட வேண்டும். திருமண மண்டபங்களை 10 மணிக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெரும்பாலான அந்நிய செலவாணி கையிருப்பு எரிபொருளுக்கு தான் செலவிடப்படும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருட்டில் நடந்த அமைச்சரவை
மேலும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் அனைத்து அரசு அமைப்புகள், துறைகள் மின்சாரப் பயன்பாட்டை உடனடியாக 30 சதவீதம் குறைக்க வேண்டும் என கூடுதலாக உத்தரவிட்டுள்ளார்.
இதனால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கூட மின்விளக்குகள் பயன்படுத்தப்படவில்லை. அறையின் ஜன்னல் வழியாக கிடைத்த சூரியஒளி வெளிச்சத்தை பயன்படுத்தி இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட கூட்டம் நடந்த அறை போதிய வெளிச்சமின்றி இருட்டாக இருந்ததாக கூறப்படுகிறது
ஆகவே பாகிஸ்தானில் இதே நிலை தொடர்ந்தால் அடுத்த இலங்கை போல் மாற வாய்ப்புள்ளதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.