ரூ. 10,999 விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்போன் - என்னென்ன சிறப்புகள் தெரியுமா?

tecno smartphone budget smartphones latest smartphones tecno pova 2 smartprix
By Petchi Avudaiappan Aug 03, 2021 10:12 PM GMT
Report

 டெக்னோ நிறுவனத்தின் புதிய போவா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து காண்போம் .

மொபைல் சந்தையில் நாளுக்கு நாள் நிலவும் போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு நிறுவனமும் புதிய சிறப்பம்சங்களுடன் தங்கள் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் அறிமுகமாகியுள்ள புதிய போவா 2 ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+ டாட்-இன் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128ஜிபி ரோம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டு கைரேகை சென்சார், 7000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகிய சிறப்புகள் இடம் பெற்றுள்ளது.

இதன் ஆரம்ப விலை ரூ.10,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ஆகஸ்ட் 5 முதல் குறுகிய காலக்கட்டத்திற்கு சலுகை விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.