இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் காவல்துறை மிரட்டியதா? தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

BJP Uttar Pradesh Election
By Karthikraja Nov 20, 2024 04:30 PM GMT
Report

 இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் காவல்துறை மிரட்டியதாக முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்திரப்பிரதேச இடைத்தேர்தல்

இன்று மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் காலை 7 மணி முதல் நடைபெற்றது. மேலும் உத்திர பிரதேச மாநிலத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.  

uttar pradesh police threat

இந்நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.  

பாஜகவிற்கு ஆதரவளித்ததால் கொலையா? சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த இளம்பெண்

பாஜகவிற்கு ஆதரவளித்ததால் கொலையா? சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த இளம்பெண்

அகிலேஷ் குற்றச்சாட்டு

அதில் மீராப்பூர் தொகுதியில் துப்பாக்கியை காட்டி வாக்களிக்க செல்லாமல் வாக்காளர்களை காவல் துறையினர் மிரட்டுகின்றனர். தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு உடனடியாக காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இதை மறுத்த காவல்துறை, "அந்த பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. உடனே காவல்துறையினர் அங்கு சென்ற போது காவல்துறையினர் மீது கற்களை வீசினர். லேசான பலத்தை பயன்படுத்தி கும்பலை கலைத்தோம். யாரையும் அச்சுறுத்தவில்லை" என விளக்கமளித்தனர்.

மேலும் சில வாக்குசாவடிகளில் பாஜக மற்றும் காவல்துறை இணைந்து கள்ள ஒட்டு போட்டுவதாகவும், வழிகாட்டுதல்களை மீறி மத அடிப்படையில் வாக்காளர்களை வாக்களிக்க செல்வதை தடுப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றஞ்சாட்டினார். குற்றச்சாட்டினை விசாரித்த தேர்தல் ஆணையம் 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.