நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தரமான விவசாயி சின்னம் - உறுதி செய்த தேர்தல் ஆணையம்

Naam tamilar kachchi Seeman
By Karthikraja May 10, 2025 03:30 PM GMT
Report

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

நாம் தமிழர் கட்சி

2016 சட்டமன்ற தேர்தல் முதல் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை எந்த தேர்தலிலும் கூட்டணி அமைக்காமல், தனித்தே தேர்தலில் களம் கண்டு வரும் நாம் தமிழர் கட்சி, ஒவ்வொரு தேர்தலில் அதன் வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறது. 

நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தரமான விவசாயி சின்னம் - உறுதி செய்த தேர்தல் ஆணையம் | Eci Alloted Farmer Symbol To Naam Tamilar Party

2016 சட்டமன்ற தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 2021 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் உரிய நேரத்தில் சின்னத்திற்கு விண்ணப்பிக்க தவறியதால், விவசாயி சின்னத்தை இழந்து மைக் சின்னத்தில் போட்டியிட்டது. 

விவசாயி சின்னம்

இருந்தாலும், இந்த தேர்தலில் 8.22% வாக்குகள் பெற்று, மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றது.

இதனையடுத்து, அக்கட்சி கேட்ட விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.