தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

India Corona Election Commission
By mohanelango Apr 27, 2021 05:29 AM GMT
Report

மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி கொண்டாட்டங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மே 2-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற இருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

Gallery