தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி நியமனம் - விஜய்யின் புகார் காரணமா?

Tamil nadu Tamil Nadu Police Tamil Nadu Election 2026
By Karthikraja Apr 02, 2026 02:37 PM GMT
Report

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் செயல்பட்டு வந்தார்.

தற்போது, அவரை மாற்றி விட்டு, தற்போது பயிற்சி கல்லூரி டிஜிபியாக உள்ள ஐபிஎல் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 

தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி நியமனம் - விஜய்யின் புகார் காரணமா? | Ec Appoints Sandeep Rai Rathore As Tamil Nadu Dgp

சந்தீப் ராய் ரத்தோர் நாளை காலை தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்க உள்ளார்.

சந்தீப் ராய் ரத்தோர்

டெல்லியை சேர்ந்த 1992 பேட்ச் தமிழ்நாடு கேடர் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், திண்டுக்கல், தூத்துக்குடியில் எஸ்.பி ஆக பணியிடறியுள்ளார். 

தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி நியமனம் - விஜய்யின் புகார் காரணமா? | Ec Appoints Sandeep Rai Rathore As Tamil Nadu Dgp

1992 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கோவை துணை ஆணையராக இருந்து பல்வேறு குற்றவாளிகளை கைது செய்தார். 

சென்னை போக்குவரத்து துணை ஆணையர், சிபிசிஐடி எஸ்.பி, மத்திய தொழில்பாதுகாப்பு படை டிஐஜி, கடலோர காவல்படை ஐஜி, ஆவடி மாநகர காவல் ஆணையர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர், சென்னை ஆணையர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மாற்றப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டலத்தின் புதிய ஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமாரும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு, அபிஷேக் தீக்‌ஷித்தும் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தவெக புகார்

சமீபத்தில், தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

தவெக புகார் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு சென்னை தேர்தல் ஆணையருக்கு, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்ட நாயக் உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், கட்சி பாகுபாடின்றி உரிய சமமான பாதுகாப்பை வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதினார்.